“10 நாள்களில் பரபரப்பான செய்தி வரும்!”

அடித்துச் சொல்லும் திவாகரன்

சிகலாவின் பெயரை வைத்து பேட்டிகளால் மோதிக்கொண்டிருந்த தினகரனும் திவாகரனும் இப்போது சட்டரீதியான மோதல் ரவுண்டுக்கு வந்திருக்கின்றனர். ‘சசிகலாவின் பெயரைப் பயன்படுத்தக்கூடாது’ என சசிகலாவின் சார்பில் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் திவாகரனுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கும் சூழலில், ‘திவாகரன் அடுத்து என்ன செய்யப்போகிறார்’ என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இந்த சூழலில் மே 14-ம் தேதி திங்கள்கிழமை தன் ஆதரவாளர்களுடன் மன்னார்குடியில் ஆலோசனை நடத்தப் போவதாக அறிவித்தார் திவாகரன். ‘கட்சி வேறு, உறவு வேறு. துரோகம் தலையெடுத்தாலும் தர்மமே வெல்லும். வாழ்வோ தாழ்வோ டி.டி.வி.தினகரனுக்குத் தோள்கொடுப்போம்’ என்று தினகரன் ஆதரவாளர்கள் மன்னார்குடி முழுவதும் போஸ்டர் ஒட்டியிருக்க, அதைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்த திவாகரன் ‘‘இவர்களை எப்படித் துவள வைக்கிறேன் பாருங்கள்’’ என உடன் வந்தவர்களிடம் சூளுரைத்தபடி காரில் வந்து இறங்கினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick