“அ.தி.மு.க-வின் அடுத்த பொதுச்செயலாளர் நான்தான்!” | K.C.Palanisamy Try to become ADMK General Secretary - Junior Vikatan | ஜூனியர் விகடன்

“அ.தி.மு.க-வின் அடுத்த பொதுச்செயலாளர் நான்தான்!”

கே.சி.பி கில்லாடி ப்ளான்

.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக ஆவதற்கான முஸ்தீபுகளில் முன்னாள் எம்.பி-யான கே.சி.பழனிசாமி இறங்கியிருப்பதால், ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் தரப்பும் தினகரன் தரப்பும் ‘ஜெர்க்’ ஆகியுள்ளன.

தினகரன்- திவாகரன் மோதலால் குஷியில் இருந்த ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் தரப்புக்கு கே.சி.பழனிசாமியின் ‘மூவ்’ அதிர்ச்சியை அளித்துள்ளது. எனவே, மீண்டும் அவரைக் கட்சிக்குள் கொண்டுவந்து ஆஃப் செய்துவிட நினைக்கிறது ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் தரப்பு. இன்னொருபுறம், கே.சி.பி-யைத் தங்கள் பக்கம் இழுத்து, எடப்பாடிக்கு செக் வைக்க நினைக்கிறது தினகரன் தரப்பு. 

கே.சி.பி-யின் நெருங்கிய வட்டாரத் தில் பேசினோம். “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கா விட்டால், மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு அ.தி.மு.க ஆதரவு கொடுக்கும் என்று டி.வி விவாதம் ஒன்றில் கே.சி.பி பேசினார். ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ் ஆகிய இருவரும் அதை மிகப்பெரிய குற்றமாகக் கருதினர். மோடிக்கு பயந்து, கே.சி.பி-யை கட்சியைவிட்டு நீக்குவதாக அறிவித்தனர். ஆனால், அதனால் எழுந்த பிரச்னைகளை சமாளிக்கத் தெரியாமல் இப்போது தவிக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick