“எந்த ஊரிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்கக்கூடாது!”

நெடுவாசல் மக்கள் எதிர்பார்ப்பு

த்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பல மாதங்களாக அச்சத்தின் பிடியில் இருந்துவந்த நெடுவாசல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், இப்போது அமைதி திரும்பியுள்ளது. நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிடுவதாக அறிவிக்கப்பட்டதால், ஊர் மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

“10 ஏக்கரில் பண்ணையம் பார்த்துட்டு வர்றோம். அதை ஒட்டுமொத்தமா பாழாக்கத் துடிக்கிறாங்க. ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட்டுட்டதா இப்போ சொல்றாங்க. இதுக்கு பதிலா இந்தத் திட்டத்துக்கு வேற இடம் கேட்குறாங்களாம். எங்கள் நிலத்துல மாத்திரமல்ல, பயிர் விளையிற எந்த நிலத்துலயும் இதுமாதிரியான திட்டத்தைச் செயல்படுத்தக் கூடாது. ஏன்னா, விளைஞ்சாதானே சோறு...” என்று வெள்ளந்தியாகப் பேசினார், நெடுவாசல் மேலத்தெருவைச் சேர்ந்த அலமேலு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick