ஆபாச ஆடியோ... சிக்கிய ஜெய்னுல் ஆபிதீன்! | Jainulabdeen sex audio issue - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (19/05/2018)

ஆபாச ஆடியோ... சிக்கிய ஜெய்னுல் ஆபிதீன்!

‘தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் தலைவராக இருந்த பி.ஜெய்னுல் ஆபிதீன் என்கிற பி.ஜெ கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலுமிருந்து நீக்கப்பட்டுவிட்டார். அவர்மீது எழுந்த புகார் நிரூபணமானதால், கட்சியின் உயர்மட்டக் குழு இந்த முடிவை எடுத்துள்ளது’ என்று அந்த அமைப்பு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அமைப்பின் ஆணிவேராக இருந்த பி.ஜெய்னுல் ஆபிதீன்மீது எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டு, ஒட்டுமொத்த அமைப்பையே அசைத்துள்ளது.

என்ன நடந்தது என விசாரித்தோம். “கடந்த ஆண்டு பி.ஜெ ஒரு பெண்ணுடன் ஆபாசமாகப் பேசும் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது அமைப்பு அதுகுறித்து விசாரித்தது. ஆனால், அந்த ஆடியோவில் பி.ஜெ-தான் பேசினார் என்பதற்கான ஆதாரங்கள் ஏதுமில்லாததால், அவர் தலை தப்பியது. ஆனால், இதே பெண் விவகாரத்தில் அப்போலோ ஹனிபா என்பவர் பி.ஜெ-வுடன் செட்டில்மென்ட் குறித்து  பேச்சுவார்த்தைகள் நடத்தியதாக அடுத்த ஆடியோ ஒன்று வெளியாக... மீண்டும் பரபரப்பு பற்றிக்கொண்டது. ஆனால், ‘ஆடியோவில் இருப்பது பி.ஜெ குரலே இல்லை. அது மிமிக்ரி செய்யப்பட்டது’ என்று விளக்கம் சொன்னார்கள். கூடவே, மிமிக்ரி செய்யப்பட்ட சாம்பிள் ஆடியோ ஒன்றையும் அந்த அமைப்பு வெளியிட்டது.

[X] Close

[X] Close