பொலிட்டிகல் பொடிமாஸ்! | Political Bit News - Junior Vikatan | ஜூனியர் விகடன்

பொலிட்டிகல் பொடிமாஸ்!

மாலை போடாத மர்மம்!

தூ
த்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி குடிநீர்த் திட்டத்தைத் தொடங்கிவைக்க மே 11-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி வந்தார். ‘பணிகள் முடியாமலே தொடக்க விழா நடத்துகிறார்கள்‘ என எதிர்த்த எதிர்க்கட்சிகள், முதல்வருக்குக் கறுப்புக்கொடி காட்ட முடிவு செய்தன. இந்தப் போராட்டத்தைத் தடுக்கும் வகையில், வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாள் விழா மற்றும் வீரசக்கதேவி ஆலய விழாவைக் காரணம் காட்டி மாவட்டம் முழுவதும் மூன்று நாள்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையே அதிகாரிகள், எதிர்க்கட்சியினரை சமாதானம் செய்துவிட்டனர். 

விழாவுக்காக மதுரையிலிருந்து காரில் வந்த எடப்பாடிக்கு, கயத்தார் உள்ளிட்ட மூன்று இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கட்டபொம்மனின் பிறந்தநாள் விழா நடந்தாலும், கயத்தாரில் நினைவு மண்டபத்தில் உள்ள கட்டபொம்மன் சிலைக்கு முதல்வர் மாலை போடவில்லை. கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்தால் பதவி பறிபோகும் என்ற சென்டிமென்ட் காரணத்தால் தவிர்க்கப்பட்டதாக அ.தி.மு.க-வினர் சொன்னார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick