சசிகலா ஆசி... ஜெயலலிதா ஆதரவு...

முருகனுக்கே மொட்டை போட்ட ‘கோயில்’ தனபால்!

ஞ்சாமிர்தத்துக்குப் பெயர் போன பழனி முருகன் கோயில் பஞ்சமில்லாமல் செய்திகளில் அடிபட்டு வருகிறது. உற்சவர் சிலை செய்வதில் நடந்த முறைகேடு, கிளை கிளையாக விரிந்து கொண்டிருக்கிறது. இப்பிரச்னையில், ஸ்தபதி முத்தையா சிக்கியிருக்கும் நிலையில், இந்து சமய அறநிலையத்துறையின் முன்னாள் ஆணையர் தனபாலுக்கும் தற்போது குறி வைக்கப்பட்டிருக்கிறது.

‘கோயில்’ தனபால் என அழைக்கப்பட்ட தனபால், ஜூ.வி வாசகர்களுக்கு ஏற்கெனவே அறிமுகம் ஆனவர்தான். இவரின் தில்லாலங்கடி வேலைகளை 2015-ம் ஆண்டே தோலுரித்தது ஜூ.வி. ‘துரத்தப்பட்ட கோயில் தனபால்’ என்ற தலைப்பில், 2015 மார்ச் 15-ம் தேதியிட்ட ஜூ.வி-யில் கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தோம். 

“சசிகலா குடும்பத்தில் முதலில் திவாகரனை நெருங்கினார் தனபால். அவர்வழியே சசிகலாவிடம் அறிமுகம் பெற்றார். ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டபோது, கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்வது போன்ற ஏற்பாடுகளைச் செய்துதந்தார். ஜெ. வெற்றி பெற்ற பிறகு, போயஸ் கார்டனுக்கு நெருக்கமானார். ஜெயலலிதா உடல்நலம் குன்றி இருந்தபோது, தமிழகம் முழுவதும் சிறப்பு பூஜைகள் செய்து, போயஸ் கார்டனுக்குச் சென்று சசிகலாவிடம் கொடுத்தவர். ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பல கோயில்களில் இந்து சமய அறநிலையத் துறையில் பொறுப்புகளை வகித்தவர். இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையராகவும் நியமிக்கப்பட்டார். முதல்முறையாக ஐ.ஏ.எஸ் அல்லாத ஒருவர் இப்படி நியமிக்கப்பட்டது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. 2013-ம் ஆண்டு தனபால் ஓய்வுபெற்ற நிலையில், மூன்று ஆண்டுகள் பணி நீட்டிப்பும் வழங்கப்பட்டது. அந்த அளவுக்கு அன்றைய அ.தி.மு.க அரசில் செல்லப்பிள்ளையாக வலம் வந்தார்’’ என தனபால் வளர்ந்த கதையைச் சொன்னார்கள் அறநிலையத் துறை வட்டாரத்தினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்