திருப்பதி கோயிலில்... காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்?

திருப்பதி ஏழுமலையான் கோயிலில்... 365 நாள்களில் 450 விழாக்கள் நடக்கின்றன. 2017-ல், சுமார் மூன்று கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்; உண்டியல் வருமானம் மட்டும் ரூ.995.89 கோடி. இவை தவிர சிறப்பு தரிசனம், சிறப்பு வழிபாடுகள் போன்றவற்றின் மூலம் பல கோடிகள் வருமானம் கிடைக்கிறது. கோயிலுக்குச் சொந்தமான நகைகள், நிலங்கள், வங்கிக் கணக்குகளில் இருக்கும் பணத்துக்கான வட்டி ஆகியவற்றின் மூலமும் கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் வருகிறது.

‘பணக்கார கடவுள்’ பாலாஜியைப் பார்த்துக்கொள்ளும் பட்டாச்சார்யர்கள் பலரும் பணக்காரர்களாகவே இருக்கின்றனர். மாநில முதல்வர்கள், கவர்னர்கள், நீதிபதிகள், உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கள், பிரபல நடிகர் - நடிகைகள் ஆகியோர் திருப்பதி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தால், கோயிலில் உள்ள பட்டாச்சார்யர்களுக்கு ஏகக் குஷிதான். இவர்களின் காட்டில் வருடம் முழுவதும் பண மழைதான் பெய்கிறது. இந்த நிலையில்தான், “திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகமவிதிகள் மீறப்படுகின்றன” என்று அங்கு தலைமை அர்ச்சகராக இருந்த ரமண தீட்சிதர் பரபரப்பு குற்றச்சாட்டைக் கிளப்ப, “தலைமை அர்ச்சகராக இருந்தபோது ஆகம விதிகளை ரமண தீட்சிதர்தான் மீறினார்” என்று கோயில் நிர்வாகத்தினர் பதில் குற்றச்சாட்டை வீச, விவகாரம் பரபரப்பாகியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick