மரணத்தின் மர்மங்கள்... ஜெ. பிறந்தநாளிலாவது முடிவு கிடைக்குமா?

‘சதத்தைக் கடந்த சாட்சியங்கள்... ஓர் ஆண்டைக் கடந்தும் விசாரணை’ எனப் போய்க் கொண்டிருக்கும் ஜெயலலிதா மரண மர்மம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் ஆயுள்காலம் மூன்றாவது முறையாக மீண்டும் இப்போது நான்கு மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி மாதம்வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பிப்ரவரி 24-ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்தநாளிலாவது அவரது மரணம் தொடர்பான மர்மங்களுக்கு விடை கிடைக்குமா என்பதே அ.தி.மு.க தொண்டர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

ஆறுமுகசாமி ஆணையம் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் இறுதியில் விசாரணையை ஆரம்பித்தது. இதுவரை 110-க்கும் அதிகமான சாட்சிகள் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களில் 95-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் சசிகலா தரப்பும் குறுக்கு விசாரணையை முடித்துள்ளது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்னும் விசாரணைக்கு அழைக்கப்படவில்லை. ‘ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த முழுவிவரங்களும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோருக்குத் தெரியும் என்பதால் அவர்களையும் விசாரணைக்கு அழைக்க வேண்டும்’ என சசிகலா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆணையத்தின் தரப்பில் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவிடமும் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் விசாரணை நடத்த முடிவாகியுள்ளது. இதற்காகவே இந்த காலநீட்டிப்பு என்றும் கூறப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick