அண்ணாமலைப் பல்கலைக்கழக முறைகேடு! - சிக்கியவர்கள் இரண்டு பேர், சிக்காமல் பலர்...

ண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ராமநாதன், முன்னாள் பதிவாளர் ரத்தினசபாபதி ஆகிய இருவர்மீதும் ஊழியர்களின் ஓய்வூதிய நிதி 40 கோடி ரூபாயை மோசடி செய்த வழக்கில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர். இந்த இரண்டு பேர் சிக்கிய நிலையில், மேலும் பலர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்கலைக்கழக ஊழியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

சிதம்பரத்தில் 1928-ம் ஆண்டு அண்ணாமலை செட்டியாரால் தொடங்கப்பட்டு, `சிறந்த தனியார் கல்வி நிறுவனம்’ என்ற பெயரைப் பெற்றது அண்ணாமலைப் பல்கலைக்கழகம். ஆனால், அவரின் வாரிசுகளின் முறையற்ற நிர்வாகத்தாலும், எந்தவிதமான விதிமுறைகளையும் கடைப்பிடிக்காமல் ஏராளமான பேராசிரியர்களையும் பணியாளர்களையும் நியமித்ததாலும் பல்கலைக்கழகத்தால் அனைவருக்கும் சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், ஊதியக் குறைப்பு, ஆள்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக 2012-ம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்தது. அதனால் அதிர்ச்சியடைந்த பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத சங்கங்களைச் சேர்ந்தோர், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். மேலும், பல்கலைக்கழக ஊழியர்களின் ஓய்வூதிய நிதியில் ரூ.143 கோடி முறைகேடு நடைபெற்றதாக அவர்கள் குற்றம் சாட்டினர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick