பேச மறுத்த ரஜினி... பதறிப்போன ஸ்டாலின்! - முரசொலி கிலி

- சூரஜ்

மீபத்தில் தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியில் ரஜினிக்கு எதிராக வெளியான கட்டுரை ஒன்று ரஜினி வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது. இதைத் தொடர்ந்து கட்டுரை வெளியான ஒருநாள் கழித்து கட்டுரைக்கு  தி.மு.க  சார்பில் சிறு விளக்கமும் அளிக்கப்பட்டிருந்தது.  “எமர்ஜென்சியையே எதிர்த்து நின்ற முரசொலி ரஜினிக்கு பயந்தது ஏன்?” என்று சமூக ஊடகங்களில் பொங்குகிறார்கள் உடன்பிறப்புகள். இந்த விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது?

‘பேட்ட’ படப்பிடிப்பில் ரஜினி பிஸியான நேரத்தில், ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில அமைப்புச் செயலாளர் இளவரசன் மற்றும் இரண்டு பேரிடம் பொறுப்பைக் கொடுத்து, மன்ற நிர்வாகத்தைக் கவனிக்கச் சொல்லியிருந்தார் ரஜினி. அதில் சில உள்குத்து விவகாரங்கள் முளைத்து ரஜினியை டென்ஷன் ஆக்கியிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick