ராஜபக்‌ஷே ராஜ்ஜியம்!- கோட்டைவிட்ட இந்தியா... வேட்டையாடிய சீனா...

ரு நாட்டின் அதிபருக்கு எதிராகத்தான் கலகம் வெடிக்கும்; ஆனால், அதிபரே கலகம் நடத்தி பிரதமரை வீழ்த்தியிருக்கிறார். ‘இப்படி நடக்கலாம்’ என எதிர்பார்க்கப்பட்டபடி, இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ராஜ்ஜியம் ஒரே நாளில் பூஜ்ஜியமாகிவிட்டது. மீண்டும், ராஜபக்சே சகோதரர்களின் ராஜ்ஜியமா என இலங்கை மட்டுமின்றி, தெற்காசியா முழுவதும் அதிர்ச்சி நிலவுகிறது.

அக்டோபர் 26-ம் தேதி மாலையில் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் சிறு அறிகுறிகூட கசிந்துவிடாமல், மிகவும் கமுக்கமாக இலங்கை அதிபர் செயலகத்தில் அரங்கேற்றப்பட்டது, ராஜபக்சேவைப் பிரதமராக்கும் வைபவம். இலங்கையின் 22-வது பிரதமராக ராஜபக்சே பதவியேற்ற நிகழ்வு, மாலையில் தொடங்கி இரவு 7.30 மணிக்கு நிறைவடைந்தது. தீவிர விடுதலைப்புலிகளின் எதிர்ப்பாளரான ஈ.பி.டி.பி கட்சித் தலைவர் டக்ளஸ் தேவானந்தா இதில் பங்கேற்றிருந்தார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ராஜபக்சேவுக்கு எதிராக அதிபர் தேர்தலில் பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றிவாகை சூடிய மைத்திரி, அதே ராஜபக்சேவுடன் மீண்டும் கைகோத்தது, இருவரும் சார்ந்த இலங்கை சுதந்திரக் கட்சியினர் மத்தியில் பரவசத்தை உண்டாக்கியது. ராஜபக்சேவின் சகோதரர்களான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சே, நாடாளுமன்ற முன்னாள் தலைவர் சமல் ராஜபக்சே ஆகியோரும் வந்து, அதிபர் மைத்திரியுடன் கைகுலுக்கி உறவைப் புதுப்பித்துக்கொண்டனர். தமிழ் மக்களுக்கு ஆதரவாகப் பேசிவந்த சிங்களத் தலைவர்களில் ஒருவரும், முந்தைய ராஜபக்சே அமைச்சரவையில் இடம்பெற்றவருமான வாசுதேவ நாணயக்காரவும் மகிந்தவுடன் சென்று மைத்திரியைச் சந்தித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick