“அமைச்சரைக் காப்பாற்ற நினைக்கிறேன்... அவர் அசிங்கப்படுத்த நினைக்கிறார்!”

ஜூ.வி-யிடம் மனம் திறக்கும் சிந்து

டியோ, ஜெயக்குமார், சிந்து, குழந்தை... கடந்த வாரம் முதல் தமிழக அரசியலைக் கலக்கும் வைரல் வார்த்தைகள் இவை. ‘‘ஆடியோவில் இருப்பது என் குரல் அல்ல’’ என ஜெயக்குமார் மறுத்ததும், ‘‘குரல் இல்லை என்றவர், குழந்தை என்னுடையது இல்லை என்றாரா?’’ என வெற்றிவேல் கேட்டார். 

1985, ஏப்ரல் 11-ம் தேதி பிறந்த சிந்துவுக்கு வயது 33. பி.பி.ஏ முடித்துவிட்டு அம்மா சாந்தி, தம்பி சதீஷ்குமாருடன் ஏழுகிணறு ஏரியாவில் வசித்து வந்தார் சிந்து. பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் சிந்து, நேரடியாகப் புகார் அளிக்கவில்லை. ஆடியோ வெளியானபிறகு, தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல்தான் பேட்டி கொடுத்தார். இதன்பிறகு சிந்து விவகாரத்தில் புதுத் திருப்பம். சிந்து, அவரின் அம்மா சாந்தி ஆகியோர்மீது அடுத்தடுத்து வழக்குகள் பாய்ந்தன. ‘வழக்கு ஃபீஸ் தராமல் ஏமாற்றிக் கொலை மிரட்டல் விடுத்தார்’ என சாந்தி மீது வழக்கறிஞர் கணேசனும், ‘ஆசை வார்த்தைகள் சொல்லி 3.50 லட்சம் ரூபாய் வாங்கி ஏமாற்றி விட்டார்’ என சிந்து மீது சூப் கடைக்காரர் சந்தோஷ்குமாரும் போலீஸில் புகார் அளித்தார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick