30 எம்.ஜி.ஆர்... 30 ஜெயலலிதா பார்சல்! | Sculptor affected for made Jayalalitha and MGR statue - Junior Vikatan | ஜூனியர் விகடன்

30 எம்.ஜி.ஆர்... 30 ஜெயலலிதா பார்சல்!

சிற்பியை கடனில் தவிக்கவிட்ட அ.தி.மு.க நிர்வாகி...

அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் ஆரம்பத்தில் வைக்கப்பட்ட ஜெயலலிதா சிலை, ‘ஜெயலலிதா சாயலில் இல்லை’ என்று எழுந்த சர்ச்சைக்குப் பிறகு சமீபத்தில் புதிய சிலையை வைத்தார்கள். “இதுவும் அம்மாவைப் போல இல்லை” என்று அழுகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். இதெல்லாம் தெரிந்த விஷயங்கள். ஆனால், அம்மா சிலை தொடர்பாகத் தெரியாத சங்கதி ஒன்று இருக்கிறது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 30 எம்.ஜி.ஆர்., 30 ஜெயலலிதா என 60 சிலைகளைச் செய்துவிட்டு அதற்கு அ.தி.மு.க நிர்வாகியிடம் பணம் வாங்க முடியாமல் லட்சக்கணக்கில் கடனாளியாகி, தொழிலும் நஷ்டம் அடைந்து கிட்டத்தட்ட கிறுக்குப் பிடிக்காத குறையாக அலைகிறார் ஒரு சிற்பி.

சேலம் - ஆத்தூர் பைபாஸ் சாலையில் அப்பம்மாசமுத்திரத்தில் இருக்கிறது திருமூர்த்தி சிற்பக் கலைக்கூடம். சிற்பக் கூடத்துக்கு வெளியே சூரியக் கதிர்கள்பட்டு தங்க நிறத்தில் ஜொலிக்கின்றன ஜெயலலிதாவின் சிலைகள். அருகிலேயே தகதகவென மின்னுகின்றன எம்.ஜி.ஆரின் சிலைகள். சும்மா சொல்லக்கூடாது... அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் வைத்திருக்கும் சிலையைவிட இங்கிருக்கும் சிலைகளுக்கு ஜெயலலிதாவின் சாயல் கூடிவந்திருக்கிறது. ஒன்றிரண்டு சிலைகளில் சின்னச் சின்ன கரெக்‌ஷன்ஸ் இருந்தாலும்கூட கண், மூக்கு, புருவங்கள் என்று பார்த்துப் பார்த்து வடித்திருக்கிறார் சிற்பி வரதராஜன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick