யார் நலனுக்கான சண்டை? - மத்திய அரசு - ரிசர்வ் வங்கி மோதல்...

பி.ஜே.பி-யின் லேட்டஸ்ட் மோதல் ரிசர்வ் வங்கியிடம் தொடங்கியிருக்கிறது. மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே மோதல் மற்றும் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது ஒன்றும் புதிதல்ல. ஆனால், தங்களது நடவடிக்கைகளில் மத்திய அரசின் தலையீடு இருப்பதால் ரிசர்வ் வங்கியின் தனித்தன்மைக்குச் சிக்கல் எழுந்துள்ளதாக அதன் துணை கவர்னர் விரால் ஆச்சார்யா பேசிய பேச்சை அவ்வளவு எளிதாகப் புறம்தள்ள முடியாது. என்ன நடக்கிறது இங்கே?

கடன் தொல்லையில் சிக்கித் தவித்த பத்துக்கும் மேற்பட்ட வங்கிகளைச் சிக்கல்களிலிருந்து மீட்க ‘பி.சிஏ’ எனும் (Prompt corrective action- PCA) சட்டக் கட்டமைப்பின்கீழ், கடந்த ஆண்டு சில கடுமையான விதிமுறைகளை அறிவித்தது ரிசர்வ் வங்கி. இதனால் வங்கிசாரா நிதி நிறுவனங்கள், வீட்டுக்கடன் நிறுவனங்கள், சிறு மற்றும் குறு நிறுவனங்கள் ஆகியவை மூலதனம் இல்லாமல் தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதாக மத்திய அரசு உணர்ந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்