மிஸ்டர் கழுகு: ஸ்டாலின் Vs ரஜினி - பி.ஜே.பி மெகா பிளான் | Mr.Kazhugu - Politics & Current affairs - Junior Vikatan | ஜூனியர் விகடன்

மிஸ்டர் கழுகு: ஸ்டாலின் Vs ரஜினி - பி.ஜே.பி மெகா பிளான்

தெம்பாக வந்த கழுகார், சுழல் நாற்காலியில் விர்ரென்று ஒரு ரவுண்ட் அடித்து பாட்ஷா ஸ்டைலில் ஒரு பார்வை பார்த்தார்.

‘‘கழுகாருக்கு என்னாச்சு?’’ என்று நாம் யோசித்துக் கொண்டிருக்கும்போதே...

‘‘காலையில் ஓர் அரசியல் பிரபலம் எனக்கு போன் போட்டார். ‘மூன்று மாதங்களுக்கு முன், ‘ரஜினி கையில் இரட்டை இலை... பி.ஜே.பி விரிக்கும் மாயவலை’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டீர்கள் இப்போது நடப்பதையெல்லாம் பார்த்தால், பெரும்பாலும் அந்தத் திசையில்தான் தமிழக அரசியல் பயணிக்கும்போல. ‘ஸ்டாலின் தலைமையில் ஓர் அணி... ரஜினி தலைமையில் ஓர் அணி என்றுதான் தமிழக அரசியல் களம் இனி இருக்கும்’ என்று கராத்தே தியாகராஜன் சொல்லியிருப்பதையும் முடிச்சுப்போட்டுப் பாருங்கள்’ என்று சொன்னார்.”

‘‘ஓ... அதுதான் உற்சாகத்தில் மிதக்கிறீரோ?’’

‘‘சரி... சரி நான் வந்த வேலையைப் பார்க்கிறேன்’’ என்ற கழுகார் செய்திகளுக்குள் புகுந்தார்.

‘‘ப.சிதம்பரத்தின் ஆதரவாளரான கராத்தே தியாகராஜன், ‘தமிழக அரசியல் களம் இனி ஸ்டாலின், ரஜினி இடையேதான்’ என்று கடந்த 30-ம் தேதி ஒரு செய்தியைக் கொளுத்திப்போட்டார். இது அ.தி.மு.க, தி.மு.க -வினர் இடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு முந்தய நாள் ரஜினியைச் சந்தித்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் பேசிவிட்டு வந்த கராத்தே, ஸ்டாலின் - ரஜினி என்று வாய் திறக்கிறார் என்றால் ஏதோ பின்னணி நிச்சயமாக இருக்கும் என்பதுதான் இரண்டு கழகங்களிலும் பரபர விவாதமாக மாறியிருக்கிறது’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick