என்ன செய்தார் எம்.பி? - கே.என்.ராமச்சந்திரன் (ஸ்ரீபெரும்புதூர்) | Enna Seithar MP Sriperumbudur K.N. Ramachandran - Junior Vikatan | ஜூனியர் விகடன்

என்ன செய்தார் எம்.பி? - கே.என்.ராமச்சந்திரன் (ஸ்ரீபெரும்புதூர்)

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
‘‘ஓயாத போக்குவரத்து நெரிசல்... ஓய்வெடுக்கும் எம்.பி!’’

#EnnaSeitharMP
#MyMPsScore

“உங்கள் துன்பங்கள் தீரும், துயரங்களிலிருந்து விடுதலை கிடைக்கும்’’ - கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது ஸ்ரீபெரும்புதூரில் கே.என்.ராமச்சந்திரனுக்காக ஜெயலலிதா இப்படி முழங்கியபோது ஏதோ குருப்பெயர்ச்சி பலன்களை வாசிப்பதுபோலவே இருந்தது. அந்தத் தேர்தலில் தி.மு.க-வின் ஜெகத்ரட்சகனை ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்ற கே.என்.ராமச்சந்திரன், வாக்களித்தவர்களின் துயரங்களைப் போக்கினாரா? தொகுதியைச் சுற்றி வந்தோம்.

சென்னை மாநகரின் நுழைவாயில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி. தமிழகத்திலேயே அதிக அளவில் பன்னாட்டுத் தொழிற்சாலைகள் இங்கு நிறைந்திருக்கின்றன. சென்னை புறநகரில் அதிகம் பேருக்கு வேலைவாய்ப்புத் தருவது இந்தத் தொகுதிதான். அம்பத்தூர் தொழிற்பேட்டை, மீனம்பாக்கம் விமான நிலையம், தாம்பரம் மெப்ஸ் ஏற்றுமதி வளாகம், தேசிய சித்த மருத்துவ நிறுவனம், ராஜீவ்காந்தி நினைவிடம், ஆதிமக்கள் வாழ்ந்த பல்லாவரம் என பல முக்கியமான இடங்கள் இந்தத் தொகுதியில்தான் இருக்கின்றன.

கே.என்.ராமச்சந்திரன் தத்தெடுத்திருந்த வல்லக்கோட்டை கிராமத்துக்கு முதலில் சென்றோம். பெரும்பாலான தெருக்கள் கான்க்ரீட் சாலைகளாக மாறியிருந்தன. தரமான ஆரம்பப் பள்ளி, நூலகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருந்தன. ‘‘இதையெல்லாம் உங்க எம்.பி செய்து கொடுத்தாரா?’’ என அப்பகுதியினரிடம் கேட்டதும், ‘‘இந்த ஊருக்கு எல்லாத்தையும் செய்யுறது கம்பெனிகாரங்கதான். எம்.பி-யை நாங்க பார்த்ததே கிடையாது’’ என்றனர் கோபமாக. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick