“இனியும் மக்களை ஏமாற்ற முடியாது!” - அணைக்காகத் திரண்ட ஆச்சர்ய விவசாயிகள்

‘ஆனைமலையாறு மற்றும் நல்லாறு அணைகளை தமிழக அரசு உடனே கட்ட வேண்டும்’ என்ற கோரிக்கையை வலியுறுத்திச் சமீபத்தில் திருப்பூரில் திரண்ட விவசாயிகள் கூட்டத்தை ஒட்டுமொத்த தமிழகமும் திரும்பிப் பார்த்தது. சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலான இந்தக் கோரிக்கைக்காக அவ்வப்போது, சில நூறு பேர் கூடி, போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ நடத்துவது வழக்கம். ஆனால், இந்தப் பேரணியில் வழக்கத்துக்கு மாறாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பரித்து வந்தார்கள்.

இந்தத் திடீர் எழுச்சி எப்படி ஏற்பட்டது என்று விசாரித்தபோது, ‘நல்லாறு இயக்கத்தினர்’ செய்த புரட்சி வெளிச்சத்துக்கு வந்தது. ‘‘நம் பிரச்னை என்ன என்பது புரியாததுதான் நமக்குப் பிரச்னையே. மக்களுக்குப் பிரச்னையைப் புரிய வைப்போம்’’ என விவசாயிகளுக்காகக் களத்தில் குதித்திருக்கிறது ஒரு ‘படித்த’ குழு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick