கிராம சபை கேள்வி கேட்டால் கைது! - கேள்விக்குறியாகும் அரசியல் சாசன சட்ட உரிமை... | 17 arrest for asking question in Grama Sabha - Junior Vikatan | ஜூனியர் விகடன்

கிராம சபை கேள்வி கேட்டால் கைது! - கேள்விக்குறியாகும் அரசியல் சாசன சட்ட உரிமை...

ந்திய அரசியல் சாசன 73-வது சட்டத் திருத்ததின் அடிப்படையில் ஒரு ஊராட்சியின் வாக்காளர்கள் அனைவருமே கிராம சபையின் உறுப்பினர்கள் ஆவர். இவர்களுக்குக் கிராம சபையில் தங்கள் கிராமத்துப் பிரச்னைகள் குறித்துப் பேசவும், கேள்வி கேட்கவும், அதுதொடர்பாகத் தீர்மானம் நிறைவேற்றவும் உரிமை உண்டு. ஆனால், இந்தச் சட்ட உரிமையைக் காலில் போட்டு மிதித்த ஊரக வளர்ச்சித் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அவ்வாறு கேள்வி எழுப்பியவர்கள் மீது பொய் வழக்குப் போட்டு, கைது செய்திருக்கிறார்கள். 

என்ன நடந்தது என்று அத்திப்பாடி கிராமத்தைச் சேர்ந்த அருளிடம் பேசினோம். “ஆகஸ்ட் 15-ம் தேதி அத்திப்பாடி கிராமத்துக்கு உட்பட்ட வேலவன் நகரில் கிராம சபைக் கூட்டம் ஊத்தங்கரை பி.டி.ஓ ஹேமலதா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ‘எங்கள் கிராமம் வழியாக எட்டுவழிச் சாலை அமைக்கக் கூடாது என்று தீர்மானம் போடவேண்டும்’ என்று கேட்டோம். ‘இது அரசுக்கு எதிரான தீர்மானம், எழுத முடியாது’ என்றார் பி.டி.ஓ. நாங்கள், ‘இது அரசுக்கு எதிரானது அல்ல. பொதுமக்களின் கோரிக்கை’ என்றோம். உடனே பி.டி.ஓ, மேலதிகாரிகளிடம் பேசிவிட்டு வருவதாகக் கூறிவிட்டு, பாதியிலேயே கிளம்பிவிட்டார். அவர் வருவார் என்று காத்திருந்தால் போலீஸார் கும்பலாக வந்து, எங்கள் எல்லோரையும் மிரட்டி அனுப்பினார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick