கீழடி அகழாய்வில் ‘உள்ளடி’ படுதோல்வி! - Follow-up | High Court order about Keeladi excavation Report - Junior Vikatan | ஜூனியர் விகடன்

கீழடி அகழாய்வில் ‘உள்ளடி’ படுதோல்வி! - Follow-up

கீழடி தொல்லியல் அகழ்வாராய்ச்சி அறிக்கையை அமர்நாத்தே தயாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது, உயர் நீதிமன்றம். இதன்மூலம் தமிழகத்தின் பெருமைகளைத் தோண்டிப் புதைக்கப் பார்த்த சிலரின் முகத்தில் கரியைப் பூசியிருப்பதாகக் கருதுகிறார்கள், தமிழக தொல்லியல் துறை ஆய்வாளர்கள்.

மதுரை, கீழடியில் 2013-ம் ஆண்டு மத்திய தொல்லியல் துறைக் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் அகழ்வாராய்ச்சி தொடங்கப்பட்டது. சுமார் நான்கு ஏக்கர் பரப்பளவில் நடந்த முதல், இரண்டாம்கட்ட ஆய்வுகளில், மிகவும் தொன்மையான பொருள்கள் கிடைத்தன. அத்துடன் மிகப் பழைமையான நாகரிகம் இருந்ததற்கான தடயங்களும் கிடைத்தன. இதனால், தமிழகத்திலிருந்துதான் தொன்மையான நாகரிகம் தொடங்கியிருக்க வேண்டும் என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகத் தொல்லியல் ஆய்வாளர்கள் நம்பினார்கள். இந்த நிலையில்தான் ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருந்தபோதே அமர்நாத்தை இடமாற்றம் செய்தவதற்கான உள்ளடி வேலைகள் தொடங்கின. மூன்றாம்கட்ட ஆய்வுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick