பேராபத்தில் தென்னிந்திய திருச்சபை பேராயம்... சென்னை மர்மம் என்ன?

சென்னை வேப்பேரியில் உள்ள தூய பவுல் கல்விநிறுனங்களுக்குச் சொந்தமான 200 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அபகரிக்க முயற்சி நடப்பதாகத் ‘திடுக்’ புகார் எழுந்துள்ளது. பள்ளியை நிர்வகித்து வரும் தென்னிந்திய திருச்சபையின் சென்னைப் பேராயமே இத்தகைய முறைகேட்டுக்குத் துணைபோவதாகத் திருச்சபையைச் சேர்ந்தவர்களே குற்றம்சாட்டுகிறார்கள். என்ன நடக்கிறது என்று விசாரித்தோம்.

“தென்னிந்திய திருச்சபையின் (சி.எஸ்.ஐ) சென்னைப் பேராயத்துக்கு நூற்றுக்கு மேற்பட்ட கிறிஸ்தவ ஆலயங்கள் உள்ளன. சேவை மனப்பான்மையோடு கல்லூரிகளையும் பள்ளிகளையும் இச்சபையின் முன்னோர்கள் தொடங்கினார்கள். ஆனால், இப்போது...” என்று வருத்தத்துடன் நிறுத்தியவர், சில நிமிடங்கள் கழித்து நம்மிடம் தொடர்ந்து பேசினார், சென்னை சி.எஸ்.ஐ பேராயத்தின் ஒடுக்கப்பட்டோர் நலத்துறை முன்னாள் ஒருங்கிணைப்பாளர் கே.பி.ஆரோன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick