கன்ட்ரோல் ரூம் | Police Atrocities News - Junior Vikatan | ஜூனியர் விகடன்

கன்ட்ரோல் ரூம்

- காக்கிசான், ஓவியங்கள்: ரமணன்

‘ஜில் பீர்’ போலீஸ்

ன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில், மாவட்டக் குற்ற ஆவணக் காப்பக அதிகாரியாக இருந்தவர், அவர். குடும்பம் ஊரில் இருந்ததால், தனியாக லாட்ஜில் ரூம் போட்டுத் தங்கியிருந்தார். ஜில் பீர் அவருக்குப் பிடித்தமான ஒன்று. பீரைக் குளிரூட்டுவதற்காகவே லாட்ஜில் ஃப்ரிட்ஜ் வாங்கி வைத்திருந்தார். நண்பர்கள் யாராவது அவரைப் பார்க்க வரும்போது பீருடன் வந்தால் அவரது முகத்தில் குபீர் சிரிப்பு தென்படும். அலுவலகத்தில் தனி அறையில் இருக்கும்போதும் பீருடன் கூட்டணி வைத்திருப்பாராம். இதனால் எஸ்.பி. அலுவலக  அமைச்சுப் பணியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் முட்டல், மோதல் ஏற்பட்டிருக்கிறது.  அமைச்சுப் பணியாளர்கள் அந்த அதிகாரி குறித்து எஸ்.பி-யிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். அந்த அதிகாரியோ தன்னிச்சையாக கோட்டாறு காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். பிரச்னையில் உயர் போலீஸ் அதிகாரி தலையிட்டதால், பீர் அதிகாரி மதுரைக்கு டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டிருக்கிறார். ‘எந்த அமைச்சரையாவது பிடித்து மீண்டும் குமரி மாவட்டத்துக்கு வருவேன்’ என்று சபதம் போட்டுச் சென்ற அந்த அதிகாரி  இப்போது சென்னையில் முகாமிட்டிருக்கிறாராம். “கடவுளே இவர் மீண்டும் திரும்ப வந்துவிடக் கூடாது” எனக் கோயில்தோறும் அர்ச்சனை செய்துவருகிறாராம் லாட்ஜ் ஓனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick