மிஸ்டர் கழுகு: ஆபரேஷன் அ.ம.மு.க ரெடி! | Mr.Kazhugu - Politics & Current affairs - Junior Vikatan | ஜூனியர் விகடன்

மிஸ்டர் கழுகு: ஆபரேஷன் அ.ம.மு.க ரெடி!

கைகொள்ளாத கிஃப்ட் பார்சல்களோடு வந்த கழுகார், “நிறையப் பேரை நேரில் சந்தித்து நேரத்தோடு கொடுக்க வேண்டும். சீக்கிரம் கிளம்பவேண்டும்’’ என்று படபடத்தார்.

“என்ன பட்டாசு பார்சலா?’’ என்று நாம் கேட்டதுமே...

“உச்ச நீதிமன்றம் வேறு ஏகப்பட்ட கட்டுப்பாடுகளைப் போட்டிருக்கிறது. நீர் வேறு கொளுத்திப்போட்டுவிடாதீர். எல்லாமே ஸ்வீட் பார்சல்தான்’’ என்றவர் வேகமாகத் தகவல்களைக் கொட்ட ஆரம்பித்தார்.

“சி.பி.ஐ மீதான அதிரடி தாக்குதல்போல, நீதித்துறை மீதும் ஏதாவது தாக்குதல் நடக்கக்கூடும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், இந்த விஷயத்தை சுமுகமாக முடித்திருக்கிறது மத்திய அரசு. உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பதவிகள் காலியாக இருக்கின்றன. நீதிபதிகள் மதன் பி.லோகூர், குரியன் ஜோசப் இருவரும் இந்த ஆண்டு ஓய்வுபெறுகின்றனர். இதையெல்லாம் ஈடுகட்ட நான்கு மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளை (மத்தியப் பிரதேசம் - ஹேமந்த் குப்தா, திரிபுரா - அஜய் ரஸ்தோகி, பாட்னா - எம்.ஆர்.ஷா, குஜராத் - ஆர். சுபாஷ் ரெட்டி) உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்தது. வழக்கத்துக்கும் மேலான வேகத்தில் இவை ஏற்றுக்கொள்ளப்பட்டு நான்குபேரின் பதவியேற்பு நிகழ்வே முடிந்துவிட்டது.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick