அழகிரி முதல் அம்பானி வரை - ரஜினி சர்க்கார்!

நீண்டகாலமாக இழுத்துக்கொண்டே இருந்தாலும் தமிழக அரசியலில் ரஜினியின் வருகை பெரும் புயலை ஏற்படுத்தும் என்பதை மறுக்கமுடியாது. அதுவும் சமீப நாட்களாக ரஜினியின் உள்வட்டாரங்களில் நடப்பதை எல்லாம் உற்றுக் கவனித்தால் விரைவில் ‘ரஜினி சர்கார்’ அமைப்பதற்கான ‘க்ளைமாக்ஸ்’ நெருங்கிவிடும் என்றே தெரிகிறது. அதனால்தான் தேசிய, மாநில என அனைத்துக் கட்சிகளும் ‘ரஜினியின் முடிவு என்ன?’ என்ற கேள்வியோடு காத்திருக்கின்றன. வெளியே ரஜினி அவ்வளவாகக் காட்டிகொள்ளவில்லை என்றாலும் உள்ளே அவர் கட்சியை வலுப்படுத்துவதில் தீவிரமாக இருக்கிறார் என்கிறார்கள் ரஜினிக்கு நெருக்கமான நண்பர்கள். தமிழகத்தில் மட்டும் அல்லாமல் தேசிய அளவிலும் அவர்கள் சொல்லும் ரஜினியின் நெட்வொர்க் ஒவ்வொன்றும் ‘அடேங்கப்பா’ ரகங்கள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick