கொள்ளைபோகுது வெள்ளியங்கிரி மலை!

கோவை மாவட்டத்தின் நீராதாரம் வெள்ளியங்கிரி மலை. நொய்யல், சிறுவாணியின் நதிமூலமும் இதுவே. நீலகிரி உயிர்க்கோள காப்பகத்தின் முக்கியப் பகுதிகளில் ஒன்று இது. இன்னும் நிறையச் சொல்லலாம். ஆனால், இந்த மலையை ஆக்கிரமிப்புகள், ஆன்மிகம், சாசக சுற்றுலா என்கிற பெயரில் சூறையாடிவருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு சமீபகாலமாக அதிகரித்துள்ளது. விரைவில் வரவிருக்கும் கார்த்திகை தீபத்தின்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் இங்கு தீபம் ஏற்றப்படுவதால் வனம் முழுவதும் தீப்பிடிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

வெள்ளியங்கிரியைப் பாதுகாக்கக் கோரி நீண்டகாலமாகச் சட்டப் போராட்டம் நடத்திவருகிறார், இந்து மக்கள் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் செந்தில்குமார். “வெள்ளியங்கிரி பகுதியில் சமீபமாக அதிகளவில் கட்டடங்கள், மின்வேலிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் பாதிக்கப்படுகின்றன. இதுகுறித்து பலமுறை புகார் மனுக்கள் அளித்துள்ளேன். ஆனால், நடவடிக்கை இல்லை. சிலர் வெள்ளியங்கிரி மலையில் எந்தவித பாதுகாப்பு ஏற்பாடும் இல்லாமல் பெரிய கொப்பரைகளில் ஆயிரக்கணக்கான லிட்டர் எண்ணெய் ஊற்றி சுமார் மூன்று நாள்களுக்குத் தொடர்ந்து தீபத்தை எரியவிடுகின்றனர். தீபத்திலிருந்து தீப்பொறி பரவினால் வனம் முழுவதும் தீப்பிடிக்கும். கார்த்திகை தீபத்துக்காகப் பல லட்சம் வசூல் செய்து, வனத்துறையின் அனுமதி இல்லாமல் 45 நாள்கள் மலையில் தங்கிவிடுகின்றனர். மலையிலேயே குடித்துவிட்டுக் ஆட்டம்போடுகின்றனர். ஆண்டு முழுவதும் சாகச சுற்றுலா என்ற பெயரில் கூட்டம் கூட்டமாக மலை ஏறுகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick