“என்னையே எரித்தாலும் கொள்கை மாறமாட்டேன்!”

சபரிமலை சந்தீபானந்தகிரி ‘தீ’ பேட்டி!

கேரள மாநிலத்தின் திடீர் ‘தீ’ பிரமுகராகியிருக்கிறார் சுவாமி சந்தீபானந்தகிரி. திருவனந்தபுரம் அருகே குண்டமங்கடவுவில் ஆசிரமம் நடத்திவரும் சந்தீபானந்தகிரி, ‘சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம்’ என்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்திருந்தார். தொடர்ந்து கடந்த அக்டோபர் 27-ம் தேதி, அவரது ஆசிரமத்துக்குச் சிலர் தீவைத்துவிட்டனர். மறுநாளே கேரள முதல்வர் பினராயி விஜயன், சந்தீபானந்தகிரியைச் சந்தித்தார். ஆசிரமம் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. பரபரப்பான சூழ்நிலையில் சந்தீபானந்தகிரியைச் சந்தித்தோம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick