ஆஹான்

Sarav Urs
நல்லவேளை டிரெஸ் எல்லாம் கண்டுபிடிச்சாய்ங்க... ஆதிகாலம் மாதிரி இலை, தழை எல்லாம் கட்டிட்டு இருந்திருந்தா, தீபாவளிக்கு டிரெஸ் எடுக்க எத்தனை மரம் ஏறி இறங்கணுமோ?

Yuva Krishna
இந்த தீபாவளியை ‘96’ தீபாவளி என்கிறார்கள். நிஜமான 96 தீபாவளிக்கு 10 படங்கள் வந்ததாக நினைவு. ‘அவ்வை சண்முகி’, ‘அலெக்சாண்டர்’, ‘கோகுலத்தில் சீதையெல்லாம்’ பட்டாசா ஓடிச்சி. தமிழ் சினிமாவின் வெற்றிகரமான ஆண்டு அது. ரஜினி படம் இல்லாமலேயே சமாளித்துக்கொள்ள முடியும் என்னும் நம்பிக்கை தியேட்டர்காரர்களுக்கு ஏற்பட்ட வருடம். விஜய் -அஜித் இருவரையும் ஆளாக்கிய வருடமும்கூட. முதன்முதலாகச் சர்வதேச அரங்குகளில் ஒரு தமிழ்ப்படம் வசூலை வாரிக் குவிக்க முடியும் என்கிற சாத்தியத்தைச் சாதித்துக் காட்டியது ‘இந்தியன்’.

Vaa Manikandan
நிரம்ப யோசித்து வெகு நிதானமாகப் பேசி எழுதிக்கொண்டிருப்பவர்கள் அப்படியேதான் இருப்பார்கள். எந்தத் தயக்கமும் இல்லாமல் உடான்ஸாக அடித்துத் தள்ளுகிறவர்களைத்தான் இந்த உலகம் கவனிக்கும். வெகு விரைவாகப் பிரபல்யம் அடையும் யாரை வேண்டுமானாலும் உதாரணமாக எடுத்துப் பார்க்கலாம்.

நித்யானந்தம்..! நித்யானந்தம்!

Thullukutti
இலங்கையில் தீபாவளிக்கு வெடிக்கும் பட்டாசில் எழும் ஒலியும், ஒளியும் இந்தியாவினுடையதாக இருக்க வேண்டும்!

# இலங்கை நாடாளுமன்றம் விரைவில் கூடுகிறது.

Sais Lakshmanan
ரணில் விக்கிரமசிங்கே, மஹிந்த ராஜபக்‌ஷே ஆகிய இரண்டு தரப்பையுமே சாராத சாதாரணப் பொதுமக்கள் கொழும்புவில் உள்ள லிபர்டி சந்திப்பில் தினமும் அமைதியாகத் திரண்டு பதாகைகளை ஏந்தி நிற்கின்றனர். இலங்கையில் ஜனநாயகத்தைப் பாதுகாக்கவேண்டும் என்பது அவர்களது கோரிக்கை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick