உயிரோடு ஏழாயிரம் கோழிகள்! - அ.தி.மு.க எம்.எல்.ஏ தீபாவளி பரிசு...

மிழக அரசியல் வட்டாரத்தில் தீபாவளி கவனிப்புகள் பலவிதம். அதில் புதுவிதமாக உயிருடன் கோழியை, மசாலாப் பொருள்களுடன் கொடுத்து அசத்தியிருக்கிறார் அ.தி.மு.க எம்.எல்.ஏ ஒருவர்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ-வான பன்னீர்செல்வம் தனது தொகுதிக்கு உட்பட்ட கலசப்பாக்கம் மற்றும் புதுப்பாளையம் ஒன்றியக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏழாயிரம் பேருக்குத் தீபாவளிப் பரிசு கொடுக்கத் தீர்மானித்தார். பிரியாணி விருந்து கொடுப்பது அரசியல்வாதிகளின் வழக்கமான ஸ்டைல். இவரோ, ‘நீங்களே பிரியாணி சமைத்துக்கொள்ளுங்கள்’ என்று சொல்வதுபோல பிரியாணி சமைப்பதற்குத் தேவையானவற்றைப் பரிசாகக் கொடுத்துவிட்டார். உயிருடன் ஒன்றரைக் கிலோ கோழி, இஞ்சி, பூண்டு மசாலா பேஸ்ட், பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை அடங்கிய பாக்கெட், மிளகாய் தூள், மஞ்சள் தூள், நெய் பாக்கெட், இரண்டு கிலோ பாசுமதி பிரியாணி அரிசி... இவை எல்லாம் போதாது என்று கடிகாரம், ஸ்வீட் பாக்ஸ், பட்டாசு... என்று நீள்கிறது பரிசுப் பொருள்களின் பட்டியல். புதுமாதிரியான பரிசைப் பார்த்துக் குஷியாகியிருக்கிறார்கள் கட்சித் தொண்டர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick