ஆஹான்

 Ilango Krishnan
இரண்டு வருடங்களுக்கு முன்பு ஏ.டி.எம்-ல் காசு எடுத்து வாடகைக்காக வீட்டுக்காரரிடம் கொடுத்தேன். அவர், “இந்தக் காசு எல்லாம் செல்லாதாம்பா... வேற கொடு” என்றார். “எல்லாம் புது ஐநூறு ரூபாய் நோட்டுங்க” என்றேன். “இப்பதானே மோடி டி.வி-யில் சொன்னார். பார்க்கலியா...” என்றபடி நோட்டுகளைக் கையில் திணித்துச் சென்றார். எனக்குப் பதற்றமாகிவிட்டது. நாளை காலை அறுவைச் சிகிச்சைக்கு காசு கட்ட வேண்டும். நோட்டுகளை மாற்ற டாஸ்மாக்குக்கும், பெட்ரோல் பங்குக்கும் ஓடினேன். ஒருவரும் வாங்கவில்லை. மறுநாள் மருத்துவமனையில் சொன்னேன். அங்கும் குழப்பம். ஒரு முதிய பெண்மணி மடார் மடார் என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதார். எனக்குக் கோபம், எரிச்சல், வருத்தம், பதற்றம் எனக் கலவையான உணர்வுகள். அதன்பிறகு மருத்துவமனையில் இருந்த பதினைந்து நாள்களும் காசுக்காக ஏ.டி.எம் தோறும் நாயாய் அலைந்தது கொஞ்ச நஞ்சமல்ல. பித்துப் பிடித்தது போல் விரக்தியில் இருந்தேன். # டீமானிடைசேஷன் நினைவுகள்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick