மிஸ்டர் மியாவ்

பாலிவுட்டில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் ‘பிங்க்’. இதன் தமிழ் ரீமேக்கில் அஜித் நடிக்கிறார்... ஹெச்.வினோத் இயக்குகிறார்... போனி கபூர் தயாரிக்கிறார் என்று செய்தி வெளியானது. இந்தப் படத்தின் தயாரிப்பில், ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்துள்ளது.

இயக்குநர் அவதாரம் எடுக்கவிருக்கிறார் நடிகர் விஷால். விலங்குகளை மையமாக வைத்து உருவாகவிருக்கும் ஒரு படத்திற்கான கதையை அவர் எழுதி முடித்துள்ளார். இதன் ஆரம்பகட்டப் பணிகள் வரும் ஜனவரியில் தொடங்கவுள்ளது.

மாதவன் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில், கதாநாயகியாக அனுஷ்கா நடிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகவிருக்கும் இப்படம் பற்றிய அறிவிப்பை, அதன் தயாரிப்பாளர் கோனா வெங்கட் தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

அறிமுக இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படம் வரும் டிசம்பர் 21-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்தப் படத்தின் கதாநாயகி, ரெஜினா கஸாண்ட்ரா. இப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியுள்ளார், நடிகை ஓவியா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick