இருமுடிக்கட்டையும் சோதிக்கத் தயாராகும் போலீஸ்!

மண்டல பூஜை... அமைதிக்கு மன்றாடும் பக்தர்கள்...

ண்டல பூஜைக்காக வரும் 16-ம் தேதி மாலை சபரிமலை மீண்டும் நடை திறக்கப்படுகிறது. வரும் 16-ம் தேதி முதல் டிசம்பர் 27-ம் தேதிவரையும், டிசம்பர் 30-ம் தேதி முதல் ஜனவரி 20-ம் தேதிவரையும் நடை திறக்கப்படவிருக்கிறது. இதற்காக கேரளம், தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து லட்சகணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலைக்கு வரத் தொடங்கிவிட்டார்கள். ஏற்கெனவே இருமுறை குறுகிய நாள்கள் நடை திறந்தபோதே, சபரிமலையில் ஒரே கலவரம். போதாக்குறைக்கு இந்த மண்டல பூஜை காலத்தில் காவல் துறையின் அனுமதிச்சீட்டு பெற்றே சன்னிதானம் செல்ல வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது கேரள அரசு. பிரச்னைகளைச் சமாளிக்க என்ன செய்யப்போகிறது கேரள அரசு? சங்பரிவார் அமைப்புகளும் இடதுசாரி அமைப்புகள் என்னென்ன திட்டங்களை வைத்திருக்கின்றன?

மண்டல பூஜை பாதுகாப்புகளுக்கு ஒத்திகை பார்க்கும் விதமாகத்தான் சித்திரை ஆட்ட விசேஷ தினத்தில் கேரள அரசு கெடுபிடி காட்டியது. ஆனாலும், வரும் நாள்களில் சன்னி தானத்தில் போராட்டம் நடத்த சங்பரிவாரைச் சேர்ந்த பத்தாயிரம் பேர் இருமுடியுடன் இறக்கப்பட்டுள்ளனர் என்ற தகவலால் அதிர்ச்சியடைந்துள்ளது காவல் துறை. அதனால் இருமுடிக்கட்டுகளையும் சோதிக்க முடிவு செய்துள்ளது காவல்துறை. போராட்டக்காரர் களை கேடயமாக்கித் தீவிரவாத அமைப்புகள் உள்ளே வரவும் வாய்ப்பு இருப்பதாக தேவசம் சிறப்பு ஆணையம், நீதிமன்றத்தில் கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டி இந்தச் சோதனை மேற்கொள்ளப் படலாம் என்று தெரிகிறது. சன்னிதானத்தில் யாராவது ஒருவருக்குச் சின்னக்காயம் ஏற்பட்டாலே மிகப்பெரிய கலவரமாக வெடிக்க வாய்ப்பு உள்ளதாக தேவசம் கமிஷன் தெரிவித்துள்ள கருத்தும் பக்தர்களை அச்சத்தில் உறையவைத்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick