சொத்துவரி வசூலில் குளறுபடிகள் - குடியிருப்புவாசிகள் குமுறல் | Property Tax increase issue in Tamil Nadu - Junior Vikatan | ஜூனியர் விகடன்

சொத்துவரி வசூலில் குளறுபடிகள் - குடியிருப்புவாசிகள் குமுறல்

ல மடங்கு சொத்துவரியை உயர்த்தி மக்களுக்கு பேரதிர்ச்சி தந்துள்ளது தமிழக அரசு. உயர் நீதிமன்ற வழிகாட்டல்படி சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது என்றாலும், உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்ததைவிட பல மடங்கு வரி உயர்த்தப்பட்டிருப்பது மக்களைச் சுரண்டும் செயலாகும் என்று அரசியல் கட்சிகள் விமர்சித்துள்ளன.

தமிழ்நாட்டில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சொத்துவரி உயர்த்தப்பட வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், 1998-க்குப் பிறகு சென்னை மாநகராட்சி உள்பட தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் வரி உயர்த்தப்பட வில்லை. கடந்த ஜூலை மாதம் இதுகுறித்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம், தமிழகம் முழுவதும் சொத்துவரியை உயர்த்துமாறு உத்தரவிட்டது. அதைப் பயன்படுத்திக்கொண்டு தமிழக அரசும் உள்ளாட்சி அமைப்புகளும் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப சொத்துவரியைப் பல மடங்கு உயர்த்தியுள்ளன. இதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த வசந்தகுமார், “எனக்குச் சொந்தமான குடியிருப்புக்கு இதுவரை 650 ரூபாய் சொத்துவரி கட்டிவந்தேன். இப்போது, 1,290 ரூபாய் என வரியை உயர்த்தியுள்ளனர். எதற்காக இவ்வளவு அதிகமாக வரியை உயர்த்தியிருக்கிறார்கள் என்று தெரியவில்லை... அநியாயம்” என்று குமுறுகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick