மிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங்! - கஜானா திறக்கும் சசி | Mr.Kazhugu - Politics & Current affairs - Junior Vikatan | ஜூனியர் விகடன்

மிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங்! - கஜானா திறக்கும் சசி

“கஜா... கஜகஜா...” என்றபடியே வந்தார் கழுகார்.

“உற்சாகம் பொங்குகிறது போலிருக்கிறதே?”

“இருக்காதா பின்னே? சென்னைக்குப் பெரும் ஆபத்தாக உருவெடுக்கும் என்று கணிக்கப்பட்ட ‘கஜா’ புயல், மழையுடன் தணிந்துவிடும் என்று கணித்திருக்கிறார்களே, அதான்...” என்ற கழுகார், “ஆனாலும் பெங்களூருவில் குளிர் அதிகம்தான்” என்று பீடிகையைப் போட்டார்.

“புரிகிறது... புரிகிறது, சொல்லும்...”

“பெங்களூரு சிறையில் சசிகலாவுடன் டி.டி.வி.தினகரன் அண்டு கோ சந்தித்த பின்பு, அந்த அணியினர் நிலைகொள்ளாத உற்சாகத்தில் இருக்கிறார்கள். சிறையில் தகுதிநீக்க வழக்கில் மேல்முறையீடு செய்ய வேண்டுமா, வேண்டாமா என்பது உட்படத் தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்களின் இன்ன பிற பொருளாதாரச் சந்தேகங்களைத் தீர்த்துவைப்பதே சந்திப்பின் நோக்கமாம். அதுவும் சசிகலாவே நேரடியாகச் சொன்னால், தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்கள் கட்டுப்படுவார்கள் என்பது தினகரனின் நம்பிக்கை. அதன்படி, சிறைவாசிகளைச் சந்திக்கும் பொதுவான இடத்தில் சசிகலாவைச் சந்தித்தார் தினகரன். சில நொடிகள் அனைவரும் அமைதியாக இருந்தனர். தினகரன்தான் முதலில் பேச்சைத் தொடங்கினார். அப்போது. தினகரனுடன் சென்றிருந்தவர்களிடம் அவர்களின் குடும்பங்களைப் பற்றி அக்கறையாக விசாரித்துள்ளார் சசிகலா. இதில் ரொம்பவே நெகிழ்ந்து போனார்களாம் அவர்கள்...”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick