ஐடியா அய்யனாரு!

விஜய் படங்களில் சர்ச்சைக்குப் பஞ்சமா என்ன? ‘மெர்சல்’-க்கு பி.ஜே.பி என்றால், ‘சர்கார்’-க்கு அ.தி.மு.க! ட்ரெய்லரைப் பார்த்தாலே, படம் நம்மைத்தான் குறிக்கிறது என அ.தி.மு.க-வினர் வீட்டுப் பேரக்குழந்தைகள்கூட சொல்லிவிடுவார்கள். ஆனாலும் அநியாயத்துக்கு ஓவராக பொங்குகிறார்கள் அ.தி.மு.க-வினர். சரி, அப்படியே இந்தப் படங்களுக்கும் தடை வாங்கிடுங்க அமைச்சர் பெருமக்களே!

ஜீனியஸ்:
படத்தின் ஹீரோ ஐம்பது வயது நெருக்கத்தில் நான்-வெஜ் ஹோட்டல் முதலாளிபோல பளபளவென இருப்பார். கண்ணாடி போட்டிருப்பார். படத்தின் பெயர் வேறு ‘ஜீனியஸ்’. ஆனால், செய்வதெல்லாம் ஒன்றுக்கும் ஆகாத வேலைகள். தமிழக அரசியலில் ஜீனியஸ் எனப் பெயர் எடுத்தவர் செல்லூரார். அவரை பகடி செய்து எடுத்திருப்பதால், ஏற்கெனவே தூக்கிவிட்ட இந்தப் படத்தில் காட்சிகளை கட் செய்து ரீலிஸ் செய்யச் சொல்லிப் போராடலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick