ஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு? - பழ.கருப்பையா பளீர்

ர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டுவிட்டாலும், ‘சர்கார்’ பிரச்னை இப்போதைக்கு ஓயாது போலிருக்கிறது. ‘அம்மா கொடுத்த இலவசப் பொருள்களை எரிப்பது போன்ற காட்சிகளுக்கு மன்னிப்பே கிடையாது’ என்று பொங்கியிருக்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜு. இதுதொடர்பாக, ‘சர்கார்’ படத்தின் வில்லனும், முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ-வுமான பழ. கருப்பையாவிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“ஆளும் கட்சியினரின் இந்தப் போராட்டம் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது இல்லையா?”
 
“நிச்சயமாக. அரசின் தவறுகளை எடுத்துச்சொல்வது ஜனநாயகக் கடமை. அந்த வகையில், வெகுஜன ஊடகமான சினிமாவில் சமூகச் சீர்கேடுகளை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். சென்சாரில் ஒரு திரைப்படத்துக்குச் சான்றிதழ் கொடுத்துவிட்டால், அதுவே அதற்கான சட்டப்பூர்வ அனுமதி. அதற்குப் பின்பு அந்தப் படத்தை அனுமதிக்க மாட்டோம் என்பது சட்டவிரோதம். உண்மையில், நீக்கப்பட வேண்டியது படத்தின் காட்சி அல்ல; இந்த ஆட்சிதான்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick