மினி மீல்ஸ்

ஆர்.எஸ்.எஸ்-க்குப் பதிலடி!

‘அ
ரசியல் சட்டத்துக்கு எதிரான பி.ஜே.பி-யின் செயல்பாடுகளை மக்கள் மத்தியில் பிரசாரம் செய்வதற்காக’, ‘ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன்’ என்ற அமைப்பை காங்கிரஸ் கட்சி பயன்படுத்திக்கொள்ளத் தொடங்கி இருக்கிறது.  இந்த அமைப்பு, கிராமப் பஞ்சாயத்துகளில் செயல்பட்டு வருகிறது. இதன் முக்கியப் பொறுப்பாளர்களாக 24 பேரைத் தேர்ந்தெடுத்து, திருவண்ணாமலையில் சிறப்பு வகுப்பு நடத்தியுள்ளார், இந்த அமைப்பின் தேசியத் தலைவர் மீனாட்சி நடராஜன். இளைஞர்களைச் சந்திப்பதுதான் இதன் முக்கிய அஜெண்டா. ஒவ்வோர் ஊராட்சியிலும் குறைந்தபட்சம் 50 இளைஞர்களைச் சந்திக்க வேண்டும்... அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிராக பி.ஜே.பி அரசு எப்படிச் செயல்படுகிறது என்பதை அந்த இளைஞர்களிடம் எடுத்துச்சொல்ல வேண்டும் என்பது இவர்களின் நோக்கம். ஆர்.எஸ்.எஸ் நாடு முழுவதும் பி.ஜே.பி-க்கு ஆதரவாகச் செய்துவரும் பிரசாரத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், நாடு முழுவதும் இந்த இயக்கத்தைச் செயல்படுத்த இவர்கள் திட்டமிட்டுள்ளனர். 


Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick