என்ன செய்தார் எம்.பி? - பாரதிமோகன் (மயிலாடுதுறை) | MAYILADUTHURAI ADMK MP Bharathi Mohan activities - Junior Vikatan | ஜூனியர் விகடன்

என்ன செய்தார் எம்.பி? - பாரதிமோகன் (மயிலாடுதுறை)

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
மத்திய அரசு தமிழக எம்.பி-க்களை மதிப்பதில்லை!

#EnnaSeitharMP
#MyMPsScore

மீபத்தில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் புதிய ஸ்கேன் மெஷின் திறப்பு விழா நிகழ்ச்சி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையில் நடந்தது. விழாவில் பேசிய மயிலாடுதுறை எம்.பி-யான பாரதிமோகன், புதிய ஸ்கேன் மெஷின் மயிலாடுதுறை மக்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்று குறிப்பிட்டு, ஆஹாஓஹோ லெவலில் புகழ்ந்தார். உடனிருந்த எம்.பி-யின் ஆதரவாளர்களோ நெளிந்தார்கள். விழா முடிந்தவுடன் அவர்கள், “என்னண்ணே இப்படி பேசிட்டீங்க... மயிலாடுதுறைக்கு வந்த புது மெஷினை நாகைக்கு தூக்கிட்டுப் போயிட்டாங்க. அங்கிருந்த பழைய மெஷினைதான் இங்க கொண்டாந்து வெச்சிட்டாங்க...” என்று விஷயத்தைப் போட்டுடைக்க நொந்து போனார் பாரதிமோகன். தொகுதியில் மக்கள் பணிகள் எப்படி நடக்கின்றன என்பதற்கு ஒருசோறு பதம் இது!

தொகுதியில் பரவலாகவே எம்.பி பாரதி மோகனை ‘நல்லவர், எளிதில் அணுகக் கூடியவர்’ என்கிறார்கள். அவர்களே, ‘நல்லவராக இருந்தால் மட்டும் போதாதே... வல்லவராகவும் இருந்து மக்கள் திட்டங்களைச் செயல்படுத்தியிருக்க வேண்டும்’ என்று புலம்பவும் செய்கிறார்கள்.

கும்பகோணம் தி.மு.க எம்.எல்.ஏ அன்பழகனிடம் பேசினோம். “ஊருக்கு ஊர் பேருந்து நிழற்குடைகளை அமைப்பது மட்டும்தான் எம்.பி செய்திருக்கும் உருப்படியான வேலை. கொள்ளிடம் கீழணையில் ரூ.400 கோடியில் தடுப்பணை அமைக்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்தார். எடப்பாடி அரசு அரசாணை வெளியிட்டது. ஆனால், அதைச் செயல்படுத்த எம்.பி பாரதிமோகன் வலியுறுத்தவில்லை. மத்திய அரசின் ‘அம்ரூத்’ திட்டத்தின்கீழ் தமிழகத்தில் 13 நகராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுக் குடிநீர்த் திட்டங்கள், பாதாளச் சாக்கடைப் பணிகள், அரசு அலுவலகங்களைப் புதுப்பிப்பது எனப் பல்வேறு பணிகள் நடக்கின்றன. கும்பகோணம் நகராட்சியிலும் இந்தத் திட்டத்தில் ரூ.110 கோடியில் பணிகள் நடக்கின்றன. ஆனால், இந்த நகராட்சிக்குப் பொறியாளரே இல்லை. பிறகு எப்படி திட்டங்கள் சரியாக நடக்கும்? இதற்கான முயற்சியையும் எம்.பி எடுக்கவில்லை” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick