ஆஹான்

 Sowmya Ragavan
லேப்டாப்பை உடைக்குறாங்களா? உங்களுக்கு வேண்டாம்னா தேவைப்படுறவங்களுக்கு கொடுங்க. மக்கள் வரிப்பணத்தில் வாங்கினதை உடைக்க உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. இலவசத் திருமணம் பண்ணினவங்க மனைவியை விரட்டி விடாம இருந்தாச் சரி. புரட்சி எல்லாம் அளவா பண்ணுங்கய்யா...

 பொம்மையா முருகன்
2011-ல் இலவசத் திட்டங்களை ஜெ. அறிமுகப்படுத்தியபிறகு, உடனடியாகச் செய்த காரியம் வரிகளை உயர்த்தியது. LED டி.வி., ஃப்ரிட்ஜ், வாசிங்மெஷின், மோட்டார் வாகனங்களுக்கு 4.5 சதவிகிதமாக இருந்த வாட் வரி 15 சதவிகிதமானது. 2011-லிருந்து ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்ட ஜூலை 2017 வரை நான் இரண்டு LED டி.வி-கள், இரண்டு டூவீலர்கள், ஒரு குட்டியானை வாங்கியிருக்கிறேன். அவற்றுக்கு நான் கூடுதலாகச் செலுத்திய வரி சுமார் ரூ.70,000. ஆனால், நான் இலவசமாக வாங்கிய மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் ஆகியவற்றின் மதிப்பு ரூ.5,500. மேலே சொன்னது நேரடி இழப்பு. மறைமுக இழப்பையும் சேர்த்தால், இழப்பு ஒரு லட்சத்தைத் தாண்டும். இலவசங்களெல்லாம் இலவசங்களல்ல. அவற்றில் நம் வியர்வையும் கலந்திருக்கிறது!

 Narain Rajagopalan
என்னைக் கேட்டால், அடுத்துவரும் அரசு, தமிழ்நாடு முழுக்க ‘Bharath Broadband’ திட்டத்தின் கீழ், இன்னும் கூடுதலாய் செலவுசெய்து, 10 GBPS இணையக் கட்டமைப்பை உருவாக்குதல் அவசியம். தமிழ்நாட்டின் பஞ்சாயத்துகளும் குக்கிராமங்களும் இந்த grid-ல் இணைக்கப்பட வேண்டும். அடிப்படைக் கட்டமைப்பான சாலைகளை தமிழகம் முழுக்க ஏற்கெனவே கொண்டுபோயாகி விட்டது. அடுத்து நமக்குத் தேவை Information Superhighway தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick