சிந்து ஒரு கேள்விக்குறி!

மைச்சர் ஜெயக்குமார் விவகாரம் அவ்வளவு சீக்கிரம் ஓயாது போலிருக்கிறது. ‘அமைச்சர் ஜெயக்குமாருடன் இணைத்துப் பேசப்படும் சிந்து யார்? அவரின் தாய் சாந்தி யார்? இவர்களின் பின்புலம் என்ன? இதோ! உங்கள் பார்வைக்கு!’ என்ற தலைப்பில் 80 பக்கங்கள் கொண்ட ஆவணம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகப் பரவிக்கொண்டிருக்கிறது.

அந்த ஆவணத்தில் இடம்பெற்றுள்ள சில தகவல்கள் இதோ.... “சென்னை நம்மாழ்வார் பேட்டையைச் சேர்ந்த பாதிரியார் பால் மொஜாரியேட் மீது 2009-ம் ஆண்டு பாலியல் புகார் கூறினார் சாந்தி. அது போலீஸ் விசாரணையில் ‘பொய் புகார்’ என்று தெரிந்தது. ‘எழும்பூர் இருதய ஆண்டவர் ஆலய பாதிரியார் ஜோசப் மாணிக்கத்துடன் நான்கு ஆண்டுகள் மனைவிபோல வாழ்ந்தேன். அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று எழும்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்த சாந்தி, பின்னர், ‘மனக்குழப்பத்தில் பொய் புகார் தெரிவித்துவிட்டேன்’ என்று சொல்லி புகாரை வாபஸ் வாங்கினார். இந்த விவகாரத்தில், ஒரு லட்சம் ரூபாய் வாங்கியதற்கான ஆவணமும் இணைக்கப் பட்டிருந்தது. ஜான் பிரிட்டோ என்ற பாதிரியாரிடம் 2013-ம் ஆண்டு மூன்று லட்ச ரூபாய் கேட்டு சாந்தி மிரட்டினார். தண்டையார்பேட்டை செயின்ட் ஜான் சர்ச்சின் பாதிரியார் ஜெயமால், வின்சென்ட் என்ற பாதிரியார் ஆகியோரையும் சாந்தி மிரட்டினார் என்று குற்றசாட்டு கூறப்பட்டது. ஆனால், இந்தப் பாதிரியார்கள் சாந்திக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பியதால், அவர் பின்வாங்கினார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick