மிஸ்டர் மியாவ்

80’ஸ் தென் இந்திய நடிகர் - நடிகைகளின் 9-வது சந்திப்புச் சமீபத்தில் நடைபெற்றது. பாக்யராஜ், அர்ஜுன், சரத்குமார், குஷ்பூ, நதியா, ஷோபனா, சுஹாசினி, அம்பிகா உட்பட பலரும் பங்கேற்றனர். இந்தச் சந்திப்பின் சுவாரஸ்ய அனுபவங்களைத் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துவருகிறார்கள் இந்தப் பிரபலங்கள்.

‘2.0’ பட வேலைகளை முடித்துவிட்டு ‘இந்தியன் 2’ படம் மூலம் கமலுடன் கைகோக்கிறார் ஷங்கர். இதற்காக, பின்னி மில்ஸ் பகுதியில் செட் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்போகிறது. காஜல் அகர்வால், துல்கர் சல்மான், சிம்பு ஆகியோர் முக்கிய ரோல்களில் நடிக்கவுள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick