மத்திய அரசுக்கு அஞ்சுகிறதா சி.ஏ.ஜி? - பணமதிப்பிழப்பு, ரஃபேல் ஒப்பந்த ஆய்வுகள்...

“பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான தணிக்கை அறிக்கையை வெளியிடாமல் வேண்டுமென்றே தாமதிப்பதாக, மத்திய கணக்கு மற்றும் தணிக்கைத்துறை (சி.ஏ.ஜி) அமைப்பின் மீது, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் 60 பேர் புகார் கிளப்பியுள்ளனர். அவர்கள் கூட்டாக வெளியிட்டிருக்கும் கடிதம், சி.ஏ.ஜி அமைப்பின் நேர்மையையும் நம்பகத்தன்மையையும் அசைத்துப் பார்த்திருக்கிறது.

அந்தக் கடிதத்தின் சாரம்...


பிரான்ஸ் நாட்டுடன் 2015, ஏப்ரல் மாதம் மேற்கொள்ளப்பட்ட ரஃபேல் ஒப்பந்தம், 2016 நவம்பர் மாதம் அமல்படுத்தப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஆகியவை குறித்து சி.ஏ.ஜி ஆய்வு செய்திருக்கிறது. ஆனால், அதை நாடாளுமன்றத்தில் ஒப்படைக்காமல் சி.ஏ.ஜி கிடப்பில் வைத்திருக்கிறது. குறிப்பாக, நாடு முழுவதும் ரஃபேல் ஊழல் விவகாரம் பற்றி எரிந்துகொண்டிருக்கும் நிலையில், கடந்த செப்டம்பர் மாதமே அதுதொடர்பாக அறிக்கை வெளியிட வேண்டிய சி.ஏ.ஜி., வழக்கத்துக்கு மாறாக மெளனம் சாதிக்கிறது. தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில், மத்திய அரசுக்கு சங்கடம் ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக, வேண்டுமென்றே சி.ஏ.ஜி தாமதிக்கிறதோ என்று மக்கள் சந்தேகிக்கிறார்கள். 2ஜி ஊழல், ஆதர்ஷ் ஊழல், காமன்வெல்த் ஊழல் போன்றவற்றை அம்பலப்படுத்திய சி.ஏ.ஜி., இப்போது பணமதிப்பிழப்பு, ரஃபேல் குறித்து அறிக்கையளிக்கத் தாமதிப்பது பாரபட்சமான செயல். - இப்படியாக நீள்கிறது அந்தக் கடிதம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick