“ஆலைகளை மூடப்போகிறோம்!” - நெருக்கடியில் பட்டாசுத் தொழில்

ச்ச நீதிமன்றத்தின் நேரக் கட்டுப்பாட்டால் இந்த ஆண்டு தீபாவளி, வழக்கமான பட்டாசு சத்தமின்றி கழிந்திருக்கிறது. அப்படியும் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசு வெடித்ததாக, தமிழகம் முழுவதும் சிறுவர்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கெல்லாம் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், சிவகாசிப் பகுதியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் அனைவரும் ஆலைகளை மூடுவதற்கு முடிவுசெய்துள்ளனர். இதனால், தங்கள் வாழ்வாதாரம் பறிபோகப்போகிறதே என்ற அச்சத்தில் மூழ்கியிருக்கிறார்கள் லட்சக்கணக்கான தொழிலாளர்கள்.

தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்று கூறித் தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தீபாவளி அன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இதனால் பட்டாசு விற்பனையில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக சிவகாசியில் கடந்த 12-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்திய பட்டாசு உற்பத்தியாளர்கள் உள்ளிட்டோர், பட்டாசு ஆலைகளை மூடுவதற்கு முடிவுசெய்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick