கன்ட்ரோல் ரூம்

கதிகலங்கும் கடலூர் காக்கிகள்!

டலூர் மாவட்ட எஸ்.பி-யாக சரவணன் பொறுப்பேற்றதில் இருந்து அவர் மேற்கொண்டுவரும் அதிரடி நடவடிக்கைகளால், குற்றங்களும் சாலை விபத்துகளும் மாவட்டத்தில் வெகுவாகக் குறைந்துவருகின்றன. தவறு செய்யும் காவல் துறையினர் மீது கடும் நடவடிக்கைகள் பாய்கின்றன. வாகனச் சோதனையின்போது, ஹவாலா பணம் ரூ.50 லட்சம் சிக்கியது. அதில், ரூ.20 லட்சத்தை ஏட்டுகள் ரவிக்குமார், செல்வராஜ், அந்தோணிசாமிநாதன் ஆகியோர் அமுக்கிவிட்டனராம். அவர்கள் மூவரையும் பணிநீக்கம் செய்து எஸ்.பி உத்தரவிட்டார். மது குடித்து விட்டு, அடிக்கடி பணிக்கு வராத போலீஸ்காரரான அஸ்வின் டேவிட், சிறப்பு உதவி ஆய்வாளர் ரங்கநாதன் ஆகியோரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். காவல் துறையினர் யாரும் தீபாவளி வசூலில் ஈடுபடக் கூடாது... இலவசப் பட்டாசு வாங்கக் கூடாது என்றும் எஸ்.பி கறார் உத்தரவைப் பிறப்பித்தார். அதையும் மீறி பட்டாசு பாக்ஸ் இனாமாக வாங்கிய கருவேப்பிலங்குறிச்சி காவலர் மகேஸ்வரன், விருத்தாசலம் போக்குவரத்து காவலர் கணபதி ஆகியோரை கடலூர் ஆயுதப்படைக்கு எஸ்.பி டிரான்ஸ்ஃபர் செய்தார். எஸ்.பி-யின் அதிரடி நடவடிக்கைகளால் கடலூர் மாவட்ட காக்கிகள் கலக்கத்தில் உள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick