ஐ.சி.யூ-வில் தமிழகம்! - அதிர்ச்சி அளிக்கும் டெங்கு நிலவரம்!

மிழகத்தில் வடகிழக்குப் பருவமழைக்கான அறிகுறி ‘டெங்கு’ என்றாகிவிட்டது. ஒவ்வொரு வருடமும் பருவமழை தொடங்குவதற்கு முன்பு டெங்கு காய்ச்சல் தீவிரமாகப் பரவத் தொடங்கிவிடுகிறது. டெங்கு உயிரிழப்பு, நிலவேம்பு கஷாயம், அதிகாரிகளின் ஆய்வுகள், அமைச்சர்களின் ஏடாகூட பேட்டிகள் என மீடியாக்களில் வரும் தொடர் செய்திகள், மக்களை மேலும் அச்சுறுத்தத் தொடங்கிவிட்டன. லேசான காய்ச்சல் என்றாலே, அது டெங்குவாக இருக்குமோ என்று பதறித்துடித்து மருத்துவமனைக்கு ஓடும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுவிட்டார்கள். ஆனால், டெங்குவை மர்மக் காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் என்று வேறு பெயர்களில் சாயம்பூசிப் பிரச்னையைத் திசைதிருப்பிவிடும் செயல்களைத்தான் தமிழகச் சுகாதாரத்துறை செய்துவருகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை மருத்துவத்துறை, 43 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத் துறையின் புள்ளிவிவரப்படி, இம்மாதம் 8-ம் தேதியன்று 3,067 பேர் அரசு மருத்துவமனைகளில் டெங்குவுக்காக சிகிச்சை பெற்றனர். இதைவிட மூன்று மடங்கு மக்கள், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். அவர்களைக் கணக்கில் கொண்டால், அரசின் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தொட்டுவிடும்.  இப்படியிருக்க, நிலவேம்புக் கஷாயம் கொடுத்தால் பிரச்னை சரியாகிவிடுமா என்று சமூக ஆர்வலர்கள் கொதிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick