மிஸ்டர் கழுகு: பாயும் ஸ்டாலின்... பதறும் குடும்பம்! - தி.மு.க கூட்டணி கணக்கு... | Mr.Kazhugu - Politics & Current affairs - Junior Vikatan | ஜூனியர் விகடன்

மிஸ்டர் கழுகு: பாயும் ஸ்டாலின்... பதறும் குடும்பம்! - தி.மு.க கூட்டணி கணக்கு...

மெல்லிய சாரலில் தலையைச் சிலுப்பியபடியே வந்த கழுகார், “ம் ஐப்பசியே முடிந்துவிட்டது. அடைமழை வந்தபாடில்லை. ஏதோ கஜா புயல் புண்ணியத்தில் சாரலாவது விழுகிறது. அதுதான் நனைந்துகொண்டே வந்தேன்’’ என்று குஷிபொங்கச் சொன்னவர், ‘லேப் டாப்’பை ஆன் செய்தார்.

‘‘நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளில் தி.மு.க இறங்கிவிட்டது. தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் ஓரணியில் திரள்கின்றன. இந்த அணியுடன் ஜி.கே.வாசன், ஜவாஹிருல்லா, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகிய தலைவர்களும் தோழமை உணர்வுடன் செயல்பட்டுவருகிறார்கள். தி.மு.க தலைமையிலான கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தைகள் வேகமெடுத்துள்ளன.”

“ஓஹோ!’’

“அறிவாலயத்துக்கு வரிசையாக விசிட் அடிக்கும் தலைவர்களே இதற்குச் சாட்சியம். சந்திரபாபு நாயுடு வந்தபிறகு, சீதாராம் யெச்சூரி வந்தார். வரும் 22-ம் தேதி அன்று டெல்லியில் பி.ஜே.பி-க்கு எதிரான கட்சிகளின் கூட்டம் ராகுல் தலைமையில் நடைபெற உள்ளது. அப்போது பி.ஜே.பி-க்கு எதிராக அணிதிரளும் கட்சித் தலைவர்களுடன் ஸ்டாலினும் கைகுலுக்கப்போகிறார். அதன் பிறகு டெல்லியில் அகில இந்திய தலைவர்கள் சிலரைத் தனித்தனியாக ஸ்டாலின் சந்திக்கும் திட்டம் உள்ளது. இந்தக் கூட்டத்துக்குச் செல்லும்போது கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு ராகுல் காந்தி உள்ளிட்ட அகில இந்திய தலைவர்கள் சிலருக்கு அழைப்புக் கொடுக்கிறார் ஸ்டாலின்.” 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick