மினி மீல்ஸ்

- செ.சல்மான், ஆர்.குமரேசன், சி.ய.ஆனந்தகுமார், இ.கார்த்திகேயன்
படங்கள்: எல்.ராஜேந்திரன், என்.ஜி.மணிகண்டன், ஆர்.எம்.முத்துராஜ், ஈ.ஜெ.நந்தகுமார்

‘இளைய கேப்டனே வருக!’

தே.
மு.தி.க தலைவர் விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் சமீபகாலமாகப் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவருகிறார். கடந்த 13-ம் தேதி இரவு திருச்சிக்கு வந்தார் விஜய பிரபாகரனுக்கு, சமயபுரம் டோல் பிளாசா அருகே தே.மு.தி.க-வினர் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். மறுநாள் மணப்பாறையில் தே.மு.தி.க ஒன்றியக் கழகச் செயலாளர் எஸ்.டி.சரவணன் இல்லத் திருமண விழாவில் பங்கேற்கச் சென்ற விஜய பிரபாகரனுக்கு வழிநெடுக செண்டை மேளம், தப்பாட்டம், தேவராட்டம் என அமர்க்கள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரது காருக்குப் பின்னால் 500-க்கும் மேற்பட்ட கார்களும், டூவீலர்களும் அணிவகுத்தன. ‘இளைய கேப்டனே வருக’, ‘கேப்டன் பிரபாகரனே வருக’ என்று பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. “சிவன்-பார்வதி போல, எங்கள் அப்பா - அம்மாவைப் போல வாழுங்கள் என வாழ்த்துகிறேன்” என்று மணமக்களை வாழ்த்தினார் விஜய பிரபாகரன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick