நாளை நமதே..! - கேரளத்தில் தொடங்கிய நம்பிக்கைப் பயணம்!

பரிமலை சர்ச்சையில் மதத்தை முன்வைத்து கேரளத்தில் பி.ஜே.பி-யும் காங்கிரஸும் ஏட்டிக்குப் போட்டியாக நடைப்பயணங்களை மேற்கொண்டிருக்கின்றன. அதே கேரளத்தில் மதச்சார்பின்மை உள்ளிட்ட விழிப்பு உணர்வுக் கருத்துகளை வலியுறுத்தி ‘நாளைய உலகம் நம்முடையது’ என்கிற கோஷத்துடன் நடைப்பயணம் தொடங்கியிருக்கிறது இளைஞர் கூட்டம் ஒன்று.

கேரளாவின் காசர்கோடு பகுதியில் 10-ம் தேதி தொடங்கிய இந்த நடைப்பயணத்தைச் சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கர், குஜராத் மாநில எம்.எல்.ஏ-வான ஜிக்னேஷ் மேவானி, அணு உலை எதிர்ப்பாளரான சுப.உதயகுமாரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கேரளாவின் பிளாச்சிமடாவில் கோகோ-கோலா நிறுவனத்தை அப்புறப்படுத்தியதில் முக்கியப் பங்கு வகித்த விளையோடி வேணுகோபால் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் நடைப்பயணத்தில் பங்கேற்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick