ஆஹான்

Sivasankaran Saravanan
பெரியார் திரைப்படத்துக்கு நடந்த பாராட்டு விழாவில் ரஜினிகாந்த், ‘ஒரு விருந்தில் பரிமாறப்படும் உணவு வகைகளில், நமக்குப் பிடிக்காத சில வகைகள் உள்ளன என்பதற்காக, அந்த விருந்தே பிடிக்காது என ஒதுக்க முடியாது. அதுபோல, பெரியாரிடம் நான் விரும்பும் சில விஷயங்களும் உள்ளன’ என்றார். தெரிந்தோ தெரியாமலோ, ரஜினிகாந்த் தன் சொந்த வாழ்க்கையில் பெரியார் வலியுறுத்திய சில விஷயங்களைச் செய்துள்ளார். பெரியார் கூறிய கருத்தின்படி, சாதிமறுப்பு காதல் திருமணம் செய்தார். மூத்த மகளின் சாதிமறுப்பு காதல் திருமணத்தை முன்னின்று நடத்தினார். கட்டுப்பெட்டியாகப் பெண் குழந்தைகளை வளர்க்காமல் மேற்கத்திய பாணி உடைகளை அணிய உரிமை கொடுத்தார். இளைய மகளின் திருமண வாழ்க்கை நன்றாகச் செல்லாதபோது, மூடநம்பிக்கையைப் புறம்தள்ளி விவாகரத்து பெறச்செய்தார். கூடவே, பழைமைவாத நம்பிக்கைகளைத் தகர்த்து மறுமணம் செய்துவைக்க முடிவெடுத்துள்ளார். தன் பொதுவாழ்வில் மதவாதியாகக் காட்டிக்கொண்டாலும் தன் தனிப்பட்ட வாழ்வில் முற்போக்காக வாழும் ரஜினிக்கு பாராட்டுகள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick