மலம் அள்ளி உயிரிழக்கும் மனிதர்கள்...

இரண்டு தீர்ப்புகள், இரண்டு நியாயங்கள்!பாரதி செல்வா, சமூகச் செயற்பாட்டாளர்

ட்டாசு வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டிலிருந்து மக்களைக் காக்க பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடுகளை விதித்தது உச்ச நீதிமன்றம். இதைக் கண்டிப்புடன் அமல்படுத்தி ஆயிரக்கணக்கானவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தது தமிழக அரசின் காவல் துறை. சரி, அதேசமயம் உச்ச நீதிமன்றத்தின் இதர தீர்ப்புகளையும் இதே கண்டிப்புடன் தான் அமல்படுத்துகின்றனவா அரசு அமைப்புகள்? குறிப்பாக, மலம் அள்ளும்  துப்புரவு தொழிலாளர்களின் நலன் காக்கப் போடப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பு என்ன ஆனது? அதுதொடர்பாக பெயரளவுக்கேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா? 

மலம் அள்ளும் துப்புரவுத் தொழிலாளர் நலன் காக்கப் போடப்பட்ட ஒரு வழக்கில் கடந்த 2014-ம் ஆண்டு அப்போதைய தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு, ‘கையால் மலம் அள்ளும் இழிவை ஒழியுங்கள்’ என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. மேலும், ‘இன்றும் பல மாநிலங்களில் உலர் கழிப்பிடங்கள் உள்ளன. 96 லட்சம் உலர் கழிப்பிடங்களை, பிற சாதியினரால் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்படும் பட்டியல் சாதியைச் சேர்ந்த துப்புரவுப் பணியாளர்களே சுத்தம் செய்கின்றனர். பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் மலக்குழிக்குள் இறக்கிவிடுவது குற்றமாகக் கருதப்பட வேண்டும்’ என்று சில வழிகாட்டுதல்களையும் வழங்கியது. அதன் பிறகும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, வழிகாட்டுதல் களை அமல்படுத்த மாநில அரசுகள் சிறு முயற்சி கூட எடுக்கவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick