காலாவதியான கால நீட்டிப்பு... என்னவாகும் அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகள்?

விளைநிலங்களை வீட்டுமனைப் பிரிவாக மாற்றும் விவகாரத்தில் சில நிபந்தனைகளைத் தளர்த்தியும் கூடுதல் கட்டணங்களை விதித்தும், அங்கீகரிக்கப்பட்ட நிலங்களாக மாற்றிக்கொள்ளலாம் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு ஓர் ஆண்டைக் கடந்த பிறம், தமிழகத்தில் சுமார் 75 சதவிகித அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகள் வைத்திருப்போர் அங்கீகரிக்கும்படி விண்ணப்பி்க்கவில்லை.

விளைநிலங்களை வீட்டுமனைப் பிரிவாக மாற்றக் கூடாது என்று வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம், ‘அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளை சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்யக் கூடாது’ என்று 2016 செப்டம்பர் மாதம் தடை விதித்தது. ஆனாலும், தடையை மீறிப் பத்திரப் பதிவுகள் நடந்தன. இதனால், மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் யானை ராஜேந்திரன். இதையடுத்து நீதிமன்றத் தடை உத்தரவை உடனடியாகச் செயல்படுத்துமாறு பதிவுத்துறை ஐ.ஜி-க்கு நீதிமன்றம் கடுமையான உத்தரவைப் பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து, பதிவுத்துறைக்கு அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளைப் பதிவுசெய்யக் கூடாது என்று 21.10.2016 அன்று பதிவுத்துறை ஐ.ஜி சுற்றறிக்கை அனுப்பினார். இதனால், ரியல் எஸ்டேட் துறையே முடங்கிப்போனது. தடையை விலக்கக் கோரி, ரியல் எஸ்டேட் துறையினர் நீதிமன்றம் சென்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick