RTI அம்பலம்: வீணாகப் போனதா விலையில்லா கால்நடைகள்? - 4 % பேர்கூட பயன்பெறவில்லை

‘கிராமப் பொருளாதாரத்தை உயர்த்தும் திட்டம்’ என்று கடந்த தேர்தலில்  அ.தி.மு.க அளித்த வாக்குறுதிப்படி தமிழகம் முழுவதும் இலவசக் கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் வழங்கப்பட்டன. ஆனால், இந்தத் திட்டத்தின்கீழ், நான்கு சதவிகிதம் பேருக்குக்கூடத் திட்டத்தின் பலன் போய்ச்சேரவில்லை என்கிற அதிர்ச்சிக்குரிய புள்ளிவிவரம் நமக்குக் கிடைத்துள்ளது. 

‘வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள நிலமில்லாத ஏழை மக்கள் அனைவருக்கும் விலையில்லா ஆடுகள் மற்றும் கறவை மாடுகள் வழங்கப்படும்’ என்று அ.தி.மு.க சார்பில் கவர்ச்சிகரமான வாக்குறுதி கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அறிவிக்கப்பட்டது. அந்தத் திட்டம் எந்தளவுக்குச் செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்து தமிழக அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறையிலிருந்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் தகவல்கள் பெற்றோம். இத்திட்டம் தொடங்கப்பட்டு ஏழு ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், இத்திட்டம் இதுவரை 22 மாவட்டங்களில் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளது என்பது நமக்கு அளிக்கப்பட்ட தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளது. மற்ற 10 மாவட்டங்களில் ஒருவருக்குக்கூட விலையில்லாக் கறவை மாடுகள், ஆடுகள் வழங்கப்படவில்லை. தமிழ்நாட்டில், ‘அந்த்யோதயா அன்ன யோஜனா’ திட்டத்தின் கீழ் (வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள்) 18,62,615 குடும்பங்கள் ரேசன் கார்டு பெற்றுள்ளன. இவற்றில் நான்கு சதவிகிதக் குடும்பத்தினருக்குக்கூடக் கறவை மாடுகள் வழங்கப்படவில்லை. இவர்களில் 40 சதவிகிதக் குடும்பங்களுக்குக்கூட ஆடுகள் வழங்கப்படவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick